×

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் நகராட்சி சந்தையில் மாடு விற்பனை நிறுத்தம்

பொள்ளாச்சி : கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால், நகராட்சி சந்தையில் மாடு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில் ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தை நாளின்போது, பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து இருக்கும். அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். கடந்த இரண்டு வாரமாக மழை சற்று குறைவால், அந்நேரத்தில் நடந்த சந்தைநாட்களின்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து மாடுகள் விற்பனைக்காக அதிகளவு கொண்டுவரப்பட்டது. மேலும், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் விற்பனை விறுப்பாக நடைபெற்றது. இதனால், வாரத்தில் சந்தை நாட்களான செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பரபரப்புடன் இருந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டது. இதனால், இந்த வாரத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த சந்தைநாளின்போது கேரள வியாபாரிகள் வருகை இல்லாமல், விற்பனை மந்தமானதுடன் குறைவான விலைக்கே விற்பனையானது. இதற்கிடையே, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாட்டு சந்தையை தற்காலிகமாக மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது மாடுகள் வரத்து இல்லாமல் நகராட்சி சந்தை வெறிச்சோடியது.  இருப்பினும், மாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்த  ஒருசில விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மறு உத்தரவு வரும் வரை, நகராட்சிக்குட்பட்ட  சந்தை  செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.     …

The post கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் நகராட்சி சந்தையில் மாடு விற்பனை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Corona Currency Control ,Pollachi ,Corona Currency ,Pollachi Municipal Cow Market ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...